முழங்கால் வலியை சரிசெய்ய வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வயதானால் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மூட்டுவலி.

ஒருவருக்கு முழங்கால் வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

முழங்கால் வலி ஏற்பட குறிப்பாக சுளுக்கு, எலும்பு முறிவு, காயங்கள் அல்லது ஆர்த்ரிடிஸ் போன்ற தீவிரமான பிரச்சனைகள் காரணமாக அமைகின்றது.

மூட்டு இணைப்புக்கள் மற்றும் எலும்புகளில் உள்ள அழற்சி தான்.

அந்தவகையில் இந்த பிரச்சனையை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • ஹீட் பேடு (Heat Pad) முழங்காலில் உள்ள இறுக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும். அதே சமயம் ஐஸ் பேக் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வீக்கத்தைக் குறைக்கும்.

  • முழங்கால் வலி உள்ளவர்கள், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, தூங்கும் முன் குடியுங்கள். இல்லாவிட்டால், ஆப்பிள் சீடர் வினிகரை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வலிமிக்க முழங்கால் பகுதியில் நேரடியாக தடவுங்கள்.

  • கடுகு எண்ணெயைக் கொண்டு வலியுள்ள முழங்கால் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள் கடுகு எண்ணெய் மசாஜ் மூலம் வலியினால் சந்திக்கும் அசௌகரியத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

  • அக்குபஞ்சர் முழங்கால் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அக்குபஞ்சர் சிகிச்சையை ஒருமுறை மேற்கொள்ளுங்கள்.

  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் சிறிது நீர் மூன்றையும் ஒன்றாக கலந்து, 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் பாலில் சேர்த்தும் கலந்து குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்