இன்று பெரும்பாலானேர் தினமும் அவதிப்படும் நோய்களுள் மலச்சிக்கலும் ஒன்றாக கருதப்படுகின்றது.
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் வலி, எரிச்சல், அரிப்பு மற்றும் ஆசன வாய் பகுதியில் அசௌகரியத்தை சந்திப்பார்கள்.
அந்தவகையில் இதனை சில உணவுப் பொருட்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கமடைந்த நரம்புகளை சுருங்கச் செய்து, மூல நோயால் ஏற்படும் வலியை சரிசெய்து, விரைவில் குணமாக்கும் என சொல்லப்படுகின்றது.
தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- முழு தானிய உணவுப் பொருட்களான ப்ரௌன் பிரட், கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் அப்பொருட்களில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் குடலியக்கத்தை வேகப்படுத்தும்.
- நார்ச்சத்து நிறைந்த நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளான ஆப்பிள், அத்திப்பழம், பேரிக்காய், பெர்ரிப் பழங்கள், மாம்பழம், கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், குடலியக்கம் மேம்பட்டு, மூல நோய்க்கான அறிகுறிகள் மறைய ஆரம்பிக்கும்.
- சிட்ரஸ் பழங்களை மூல நோய் உள்ளவர்கள் உட்கொண்டால், ஆசன வாயில் உள்ள வீக்கமடைந்த நரம்புகள் சரிசெய்யப்பட்டு, விரைவில் மூல நோய் குணமாகும்.
- உலர் முந்திரிப்பழத்தை தினமும் ஒரு கப் சாப்பிட்டால், அது மலம் கழிக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும்.
- ஆளி விதையை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்திற்கு உதவும்.
- இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் திராட்சையுடன் நீரையும் உட்கொள்ளுங்கள். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு, மூல நோய் பிரச்னையும் விரைவில் குணமாகும்.
- தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான காபியைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் காபியில் உள்ள காப்ஃபைன், இறுக்கமடைந்த மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற உதவும்.