முதுகு வலியை எளிதில் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று வேலைக்கு செல்லும் அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் முதுகு வலி.

வேலைத்தளத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதனால் அடிக்கடி முதுகுவலியை சந்திக்க நேரிடும்.

முதுகு வலியை சரிசெய்ய கண்ட கண்ட வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை முறையில் கிடைக்கு உணவுகளை வைத்தே இதனை சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • முதுகு வலிப்பது போன்று இருந்தால், ஒரு கப் காபியைக் குடியுங்கள். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன் முதுகு வலியைக் குறைக்கும் மற்றும் மீண்டும் அப்பிரச்னையே வராமல் தடுக்கும்.
  • சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ரெட் ஒயின் இதயத்திற்கு மிகவும் நல்லது. எனவே சிவப்பு திராட்சையை சாப்பிட்டால், இதயத்தில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
  • தினமும் போதுமான அளவு காய்கறிகளை உட்கொண்டால், முதுகு வலி குணமாவதோடு, வேறு எந்த வலியும் உடலில் ஏற்படாமல் இருக்கும்.
  • கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான அவகேடோ, காய்கறிகளான ப்ராக்கோலி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
  • இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், முதுகு வலியை எதிர்த்துப் போராடுவதோடு, தொடர்ந்து அன்றாடம் எடுத்தால், முதுகு வலி எப்போதுமே வராமல் இருக்கும். மேலும் இஞ்சி செரிமானத்தை எளிதாக்கும்.
  • சால்மன் மீனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. சால்மன் மீனை சாப்பிட்டால், தசைகள் நன்கு வளர்ச்சி பெறும். அதுமட்டுமின்றி, தசைகளில் உள்ள காயங்கள் மற்றும் பிரச்னைகளைப் போக்கும்.
  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது குளிரினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் இது சுவாச தொற்றுக்களையும் சரிசெய்யும்.
  • முதுகு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் சோயாவை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் சோயா புரோட்டீனை தினமும் உட்கொண்டால், அனைத்து வகையான முதுகு மற்றும் மூட்டு வலியும் குறையும்.
  • மஞ்சள் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், முதுகு வலியைக் குறைக்கும் மேலும் இந்த பொருளில் உள்ள புரோட்டீனான NF-kB, அழற்சி எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, மூட்டுக்களில் வலி ஏற்படுவதைக் குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்