ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தையா? அப்போ இதை தினமும் இரவு தடவி பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆர்த்ரிடிஸ் என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியினை உருவாக்கும் ஒரு உடல்நலச் சீர்கேடாகும்.

இந்நோய், பல திசுக்களையும் உடல்உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும் முதன்மையாக வளையுந்தன்மையுடைய புற நீர்ம மூட்டுகளையே (synovial joints) அதிகம் தாக்குகிறது.

மூட்டு இணைப்புகளை மூடி பாதுகாக்கும் மென்மையான திசுக்கள் தேய்ந்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கடும் வலியை உண்டாக்குகிறது.

முழங்கால் வலியால், நிற்பது, நடப்பது என எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட ஒரு அற்புதமான வழி ஒன்றினை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • நற்பதமான கடுகு பொடி - 1 டீஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • உப்பு - 1 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ஒரு பௌலில் கடுகு பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தேன், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு ஸ்பூனால் அப்பொருட்களை ஒருசேர சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

தயாரித்து வைத்துள்ள கடுகு பேஸ்ட்டை வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

பிறகு 20-30 நிமிடம் கழித்து, அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

இப்படி தினமும் இரவு படுக்கும் முன் மற்றும் காலை வேளை என இரண்டு முறை தடவ வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்