தினமும் இந்த சூப்பை குடித்து பாருங்கள்... வயிற்றில் உள்ள கொழுப்பு மாயமாக மறைஞ்சிடுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலகட்டத்தில் ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

அந்தவகையில் பல்வேறு ஆய்வுகளில் கேரட் மற்றும் தக்காளி உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏனெனில் கேரட் தக்காளி சூப் குடிப்பதால் உடல் எடை மட்டும் குறைவதில்லை.

அத்துடன் உடலின் மெட்டபாலிசம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்து, பல்வேறு நோய்த் தாக்குதலில் இருந்து உடல் பாதுகாப்புடன் இருக்கும்.

மேலும் இந்த சூப் உடல் எடையைக் குறைப்பதற்கு மற்றொரு காரணம், பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்யும்.

அந்தவகையில் தற்போத இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு பற்கள் - 3-4 (தட்டிக் கொள்ளவும்)
  • மிளகுத் தூள் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை

ஒரு வாணலியில் 2 கப் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் குறைந்தது 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

காய்கறிகள் நன்கு மென்மையாக வெந்ததும், அடுப்பை அணைத்து வாணலியை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு வாணலியில் உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

இறுதியில் அரைத்து வைத்துள்ளதை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து, தேவையான அளவு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், கேரட் தக்காளி சூப் தயார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்