இந்திய பிரதமர் வைத்திருந்த அக்குபிரஷர் ரோலரால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜினிபிங்கிற்கும் இடையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு ஒன்று தமிழ்நாட்டின் மாமல்ல புரத்தில் இடம்பெற்றது.

இதற்கு அடுத்தநாள் மோடி அவர்கள் பீச் ஒன்றில் குப்பைகளை அகற்றுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோக்கள், புகைப்படங்கள் என்பன இணையத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதன்போது அவர் கையில் ஒரு சாதனத்தை வைத்திருந்தார். அதன் பெயர் அக்குபிரஷர் ரோலர் ஆகும்.

இது உடல் ஆராக்கியத்தை சிறப்பாக பேணுவதற்கு பரவலாக பயன்படுத்தும் ஒரு சாதனமாகும்.

இதன் சில பயன்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இது தசை வலிகள் மற்றும் பதட்டத்தை போக்கவல்லது.

அதாவது உடலில் காணப்படும் அமுக்க புள்ளிகளை அழுத்துவதன் ஊடாக மேற்கண்ட நிவாரணங்களை பெற முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு அக்குபிரஷர் ரோலரானது மிகவும் உதவுகின்றது.

இதனைப் பயன்படுத்தி வலிகள் உள்ள இடங்களை அழுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தசைகளில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கச் செய்யப்படுகின்றது.

இரப்பை கோளாறிலிருந்து (gastric) விடுதலை தருகின்றது

வயிற்றுப் பகுதியில் உள்ள அமுக்க புள்ளிகளை இச் சாதனத்தை கொண்டு அழுத்துவதன் மூலம் அப் பகுதியில் உள்ள தசைகள் தூண்டப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி பாதங்களில் உள்ள வளைவுகளை அழுத்தும்போது இரப்பை அமிலம் சுரக்கப்படுவது குறைக்கப்படுகின்றது.

அத்துடன் வயிற்றில் உள்ள வாயுக்களை குறைத்தல், தொற்றுக்களை தடுத்தல் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

இரத்தத்திலுள்ள சர்க்ரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்

கணையத்துடன் தொடர்புடைய அதிகளவு நரம்புகள் மற்றும் அமுக்க புள்ளிகள் என்பன பாதத்தில் காணப்படுகின்றன.

எனவே இந்த புள்ளிகளை அக்குபிரஷர் ரோலரின் உதவியுடன் மெதுவாக அழுத்தி பயிற்சி செய்வதன் ஊடாக இன்சுலின் சுரக்கப்படுதல் அதிகரிக்கச் செய்யப்படுகின்றது.

இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

சிறந்த தூக்கத்தினை வழங்குதல்

நரம்புகள் ஆசுவாசப்பட்டிருத்தல், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டிருத்தல், எதிரான மன அழுத்தங்கள் நீங்கப்பெற்றிருத்தல் என்பன ஆரோக்கியமான தூக்கத்தினை தரவல்லது.

இவை அனைத்தும் அக்குபிரஷர் ரோலரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளின்போது கிடைக்கப்பெறுவதால் சிறந்த தூக்கத்தினை பெற முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்