தினமும் நார்த்தம் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.. ஏராள நன்மைகள் அள்ளி தருமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும்.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை ஆகும்.

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இது உடலுக்கு பலவகையில் நன்மை தரும் பழமாக விளங்குகின்றது.

அந்தவகையில் நார்த்தம் பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் பயன் பற்றி இங்கு பார்ப்போம்.

  • பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

  • நார்த்தம் பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். நார்த்தன் வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும்.

  • நார்த்தம் பழத்தின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

  • ரத்தம் மாசடையும் போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

  • வாயுத் தொல்லை அதிகரிக்கும்போது நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப்பொருமல் நீங்கும்.

  • உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

  • நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். வ‌யிற்றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்ணி‌ற்கு நா‌ர்த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்