ஆண்களே! நல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக எல்லா ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

இதற்காக பல ஆண்கள் ஜிம்மே தஞ்சம் என்று நினைப்பதுண்டு.

அத்தகைய ஆண்கள் தினமும் ஜிம் சென்று பளுத் தூக்கும் பயிற்சியை மேற்கொள்வதுடன் மட்டுமின்றி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் ஆண்கள் நன்கு ஆரோக்கியமாகவும், கட்டுமஸ்தான உடலைப் பெறவும் எந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

நார்ச்சத்து நிறைந்த உணவு

ஆண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 3 கிராம் நார்ச்சத்து மற்றும் புரோட்டீனை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

அதற்கு நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளான பீன்ஸ், பருப்பு வகைகள், பாதாம், முட்டை, பால், ஓட்ஸ், சிக்கன் நெஞ்சுக்கறி போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு

ஆண்கள் வாரத்திற்கு 2-3 முறை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ண அறிவுறுத்தப்படுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களாவன ஆளி விதைகள், வால்நட்ஸ், சால்மன் மீன், பச்சை இலைக் காய்கறிகள், மத்தி மீன் போன்றவை.

பொட்டாசியம் நிறைந்த உணவு

ஆண்கள் ஒரு நாளைக்கு 4,700 மில்லிகிராம் பொட்டாசியம் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பொட்டாசியம் நிறைந்த உணவுப் பொருட்களாவன வாழைப்பழம், அவகேடோ, உருளைக்கிழங்கு, பீன்ஸ், ஸ்குவாஷ், ஆப்ரிகாட் போன்றவை குறிப்பிடத்தக்கவை

மக்னீசியம் நிறைந்த உணவு

ஆண்கள் ஒரு நாளைக்கு 429 மில்லிகிராம் மக்னீசியம் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மக்னீசியம் சத்து நிறைந்த உணவுப் பொருட்களாவன கருப்பு பீன்ஸ், விதைகள் மற்றும் நட்ஸ், யோகர்ட் போன்றவை.

செலினியம் நிறைந்த உணவு

ஆண்கள் ஒரு நாளைக்கு 55 மைக்ரோகிராம் செலினியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

செலினியம் நிறைந்த சில உணவுப் பொருட்களாவன தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் போன்றவை.

வைட்டமின் பி12 நிறைந்த உணவு

ஆண்கள் ஒரு நாளைக்கு 2.4 mcg வைட்டமின் பி12 எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

வைட்டமின் பி12 விலங்கு பொருட்களான முட்டைகள், சிக்கன், மீன், யோகர்ட், பால் போன்றவற்றில் நிறைந்துள்ளது.

ஜிங்க் சத்து நிறைந்த உணவு

ஒவ்வொரு ஆணும் ஒரு நாளைக்கு சுமார் 11 மில்லிகிராம் ஜிங்க் சத்து எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களாவன பால், கடல் சிப்பி, நட்ஸ், முட்டைகள், முழு தானியங்கள் போன்றவை.

கால்சியம் நிறைந்த உணவு

ஒரு ஆண் ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மில்லிகிராம் கால்சியம் சத்தை எடுக்க வேண்டும்.

அதற்கு கால்சிம் நிறைந்த உணவுப் பொருட்களான பால், தயிர், சோயா, டோஃபு போன்றவற்றுடன், கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்