பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க வேண்டுமா? இதோ ஓர் எளிய வழிமுறை

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது பற்கள் நன்கு வெள்ளையாக, துர்நாற்றமின்றி இருக்க வேண்டியது அவசியமாகும்.

பொதுவாக வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களினால் பற்களின் பின்னால் மஞ்சள் கறை ஏற்படுவதுண்டு.

இதன் பலர் பல சூழ்நிலைகளில் தர்ம சங்கடத்துக்குள்ளாகுவதுண்டு.

எனவே உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை ஆரோக்கியமான வழிகளில் நீக்குவது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா - 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  • டூத் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • அலுமினியத்தாள்
செய்முறை

ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அந்த கலவையை இரண்டு துண்டு அலுமினியத் தாளின் மீது தடவ வேண்டும். பின் ஒரு துண்டை மேல் பற்களின் மீதும், மற்றொன்றை கீழ் பற்களின் மீதும் வைக்க வேண்டும்.

2 நிமிடம் கழித்து, அலுமினியத்தாளை நீக்கி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

எஞ்சிய கலவையைக் கொண்டு, மீண்டும் பற்களை கை விரலால் துலக்கி, நீரால் வாயை கொப்பளியுங்கள்.

முக்கியமாக ஒருமுறை இந்த கலவையைத் தயாரித்தால், அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். மறுநாளைக்கு வைத்து பயன்படுத்தக்கூடாது.

பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க உதவும் இந்த வழியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இப்படி செய்தால், பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள் கறைகள் காணாமல் போவதோடு, பற்கள் வெள்ளையாகவும், வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers