பெண்களே பிசிஓஎஸ் பிரச்னையால் அவஸ்தையா? இந்த அற்புத பானம் குடித்தால் போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது உடலில் ஹார்மோன்கள் பல செயல்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன.

குறிப்பாக இதயத்தை துடிக்க வைப்பது, ,தூங்குவது ,எழுவது ,பசி மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்துவது ,செரிமானம் , உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது போன்றவை ஆகும்.

ஹார்மோன்கள் சரியாக இயங்காவிட்டால் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் உடலில் உள்ள சமநிலையற்ற ஹார்மோன்களை இயற்கை வழிகளின் மூலம் சமன்படுத்த முடியும். அதுவும் ஒரு அற்புத பானம் ஒன்று உள்ளது.

அந்த பானத்தைக் குடித்தால், பெண்கள் அவஸ்தைப்படும் பிசிஓஎஸ் பிரச்னையில் இருந்து எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விரைவில் விடுபடலாம் எனப்படுகின்றது.

தற்போது இப்போது அந்த அற்புத பானத்தின் செய்முறையைக் காண்போம்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய் - 2
  • துளசி இலைகள் - 10-12
  • முளைக்கட்டிய பாசிப்பயறு - 1 கப்
  • வேக வைத்த ப்ராக்கோலி - 1 கப்
  • முட்டைக்கோஸ் - 1/2 கப்

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, அத்துடன் 1 டம்ளர் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்ததை வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு உடனே அந்த பானத்தைக் குடிக்க வேண்டும். விருப்பமிருந்தால், வடிகட்டாமல் கூட குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்