தினமும் நெய்யுடன் இந்த கலவை சேர்த்து சாப்பிடுங்கள்... நன்மைகள் ஏராளமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம் முன்னோர்கள் அக்காலத்தில் பல ஆரோக்கிய பிரச்னைகளை சரிசெய்ய நமது சமையல் அறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களை பயன்படுத்தினர்.

அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் பல ஆரோக்கிய பிரச்னையை தீர்த்து இருக்கின்றது.

மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை நெய்யுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, அதனால் உடலினுள்ள பல்வேறு நோய்களை அடியோடு விரட்டி அடிக்கின்றது.

அந்தவகையில் நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

எப்படி சாப்பிட வேண்டும்?

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இது ஒருமுறை சாப்பிடுவதற்கு தேவையான அளவாகும். ஆனால் விருப்பமுள்ளவர்கள் அதிகளவு தயாரித்து, ஒரு கண்ணாடி போத்தலில் போட்டு சேமித்து வைத்து, உட்கொள்ளலாம்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.

இருப்பினும், இந்த கலவையை ஒரு நாளைக்கு எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

வேறு நன்மைகள்
  • இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து உட்கொண்டால், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, செரிமான பிரச்னைகள் நீங்கி, வயிற்று ஆரோக்கியம் மேம்படும்.
  • நெய், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை ஒன்றாக கலந்து உண்பதன் மூலம் உட்காயங்கள் இருந்து விடுபடலாம்.
  • நெய், மஞ்சள், மிளகு கலவை உடலில் ஆன்ஜியோஜெனிசிஸை ஊக்குவித்து, உடலில் புதிய இரத்த நாளங்கள் உருவாக அனுமதிக்கிறது. இந்த செயல்பாட்டினால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதய ஆரோக்கியம் மேம்படும்
  • மஞ்சள், நெய் மற்றும் மிளகுத் தூள் ஆகிய மூன்றுமே மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • ஒருவர் நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து சாப்பிடும் போது, டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
  • ஒருவர் தினமும் இந்த கலவையை உட்கொண்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக இருக்கும் மற்றும் செரிமான திறன் மேம்படும்.
  • நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, காலநிலை மாற்றத்தால் உடல்நிலை சரியில்லாமல் போவது தடுக்கப்படும்.
  • இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, பல்வேறு ஆரோக்கிய பிரச்னையைத் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்