நீங்கள் ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப தினமும் இந்த பொருட்களை ஊற வைத்து குடித்து பாருங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நீண்ட நாட்கள் நம் முன்னோர்கள் ஃபிட்டாக இருக்க சமையல் அறையில் இருக்கும் பொருட்களை தான் பெரிதும் உதவி புரிந்தது.

பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை சரிசெய்ய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் அந்த பொருட்களை நீரில் ஊற வைத்து உண்பதால், அதன் சக்தி இரட்டிப்பாகி நன்மைகள் அதிகம் கிடைக்குமாம் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது அந்த பொருட்களை என்னென்ன என்பதை பார்ப்போம்.

google
  • வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை சாப்பிட்டால், உடல் எடை குறைவதுடன், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் மற்றும் செரிமானம் சிறப்பாக நடக்கும்.
  • துளசி இலைகளை நீரில் ஊற வைத்து, அந்த நீரை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்னைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
  • பட்டையை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடியுங்கள். ஏனெனில் பட்டை நீரை ஒருவர் குடித்து வந்தால், அது செரிமான பாதையில் கார்போஹைட்ரேட்டுக்கள் உடைக்கப்படுவதைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
  • மல்லி நீரில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளதால், இது செரிமானத்தை எளிமையாக நடைப்பெறச் செய்யும்.
  • திரிபலா நீரை உடல் பருமனுடன் இருப்பவர்கள் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும். மேலும் திரிபலா நீர் வாழ்நாளை நீட்டிக்க உதவுவதோடு, தீவிரமான மலச்சிக்கல் பிரச்னையைக் குணப்படுத்த உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்