சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்க வேண்டுமா? இந்த உணவுகள் மட்டும் போதுமே...!!

Report Print Kavitha in ஆரோக்கியம்

சிறுநீரில் நோய் பாதிப்பு ஏற்படும் பொழுது அதனை சிறுநீர் பாதை நோய் தொற்று என்கிறோம்.

அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது.

ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கா விட்டால் குழாய் வழியே பை வரை பரவும். முறையான சிகிச்சை பெறாவிட்டால் கிருமி சிறு நீரகம் வரை பரவி விடும் எனப்படுகின்றது.

அந்தவகையில் சிறுநீர் தொற்றுகளை தடுக்க மருந்துகளை விட இயற்கையில் கிடைக்கும் உணவுகளே சிறந்தது என சொல்லப்படுகின்றது.

தற்போது சிறுநீர் தொற்றுகளை தடுக்க கூடிய உணவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Google
  • சர்க்கரைவள்ளி கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தொற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.
  • கரட் உடல் நலத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.
  • இலவங்கப் பட்டையை உணவில் பயன்படுத்துகிறோம். இவை சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
  • தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும்.
  • முள்ளங்கியை அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்னை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.
  • தண்ணீரும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தண்ணீர் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்