சுவிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியுமா? இதோ அற்புதமான தகவல்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

சிறு வயதில் சுவிங்கம் மென்றதை எவராலும் மறக்க முடியாது.

இதனை உள்ளே விழுங்கினால் ஆபத்து என்றெல்லாம் பெரியவர்கள் எச்சரித்தும் இருப்பார்கள்.

இவ்வாறான சுவிங்கத்தின் உதவியுடன் உடல் எடையை குறைக்க முடியும் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இருந்தாலும் அதுதான் உண்மை. ஆம், பல ஆய்வுகளிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிங்கம் சாப்பிடும்போது அது கலோரிகளை எரிக்கின்றது.

அதுமாத்திரமன்றி பசித்தன்மையையும் கட்டுப்படுத்தி அதிகளவான உணவு உள்ளெடுத்தலை தடுக்கின்றது.

இதன் காரணமாக உடல் எடை குறைவடையும் வாய்ப்பு காணப்படுகின்றது.

Rhode Island பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் நாளாந்தம் சுவிங்கம் சாப்பிடுபவர்களில் ஏனையவர்களை விடவும் 68 கலோரிகள் குறைவாக கணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சுவிங்கம் சாப்பிடுபவர்களில் மற்றையவர்களை விடவும் 5 சதவீதம் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்