அதிகமாகவோ, அடிக்கடியோ கிரீன் டீ பருகுவது ஏற்படும் விளைவு என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் எடையை குறைப்பதற்கு கிரீன் டீயைத்தான் நாடுகிறார்கள்.

இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும், இதய நோயை கட்டுப்படுத்தும், வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும், உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

அதேவேளையில் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்காக அதிகமாகவோ, அடிக்கடியோ கிரீன் டீ பருகுவது உடல் நிலையை பாதிக்கும் எனப்படுகின்றது.

தினமும் இரண்டு அல்லது மூன்று கப் கிரீன் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக் கூடாது. அப்படி பருகுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வயிறு தொடர்பான பிரச்னை

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகக்கூடாது. அப்படி பருகுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.

காலையில் சாப்பிட்ட பிறகு கிரீன் டீ பருகுவதாக இருந்தாலும் ஒரு கப்புக்கு அதிகமாக பருகக்கூடாது.

இரும்பு சத்து உறிஞ்சி எடுக்கும்

உடலுக்கு இரும்பு சத்து மிக அவசியமானது. சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு தேவையான இரும்பு சத்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் கேடசின்கள் இரும்பு சத்தை உறிஞ்சி எடுக்கும் அளவை குறைத்துவிடும். ஆகையால் அதிகமாக கிரீன் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும்.

தலைவலி ஏற்படும்

கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் காபின் அளவும் அதிகரித்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.

தூக்கமும் தடைபடும். தலைவலி பிரச்னையும் உண்டாகும். அதிலிருக்கும் காபின் தலைவலிக்கு காரணமாவதோடு தலைச்சுற்றல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்