பாதாம் பால் குடிப்பதனால் மோசமான பாதிப்புக்கள் ஏற்படுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பாதாம் பால் சாதாரண மாட்டுப் பாலை விட மிகவும் சுவையுடன் இருப்பதால் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி அருந்துகின்றனர்.

பாதாம் பால் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்தது.

ஆனால் பல நன்மைகளை வழங்கும் இது உங்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றது.

ஏனெனில் பாதாம் மிகவும் பிரபலமான ஒவ்வாமை கொட்டைகள் பட்டியலில் ஒன்றாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் பாதாம் பால் அருந்துவதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பார்ப்போம்.

Google
 • நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் முகத்தில் வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
 • பாதாம் பால் குடிப்பது ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,ஆனால் இந்த பக்க விளைவைவுடன் ஒப்பிடும்போது இதனை அதிகம் குடிக்காமல் இருப்பதே நல்லது.
 • பாதாம் பால் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
 • பாதாம் பால் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாறாக நாளடைவில் அவர்களின் செயல்பாடுகளில் இது சிக்கல்களை ஏற்படுத்தும்.
 • லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் பால் அதிகம் குடிப்பது பல பக்க விளைவுகளை உண்டாக்கும். அத்தகைய நபர்கள் பாதாம் பாலை உட்கொண்ட பிறகு ஒவ்வாமை ஏற்படலாம், எனவே, அதை முழுமையாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 • பாதாம் பாலை உட்கொள்வது அரிப்பு, சரும அழற்சி மற்றும் படை நோய் போன்ற தோல் எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த எதிர்வினைகள் பெரும்பாலும் பாதாம் பாலை உட்கொண்ட 10 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் தோன்றும்.
 • பாதாம் பாலில் ஒவ்வாமை உள்ளவர்கள் வயிற்றுப் பிடிப்பை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் இந்த பாலை ஜீரணிப்பது கடினம்.
 • பாதாம் பாலின் பக்க விளைவுகளில் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்னைகள், மூச்சுத்திணறல் மற்றும் சிக்கலான சுவாசம் ஆகியவையும் அடங்கும்.
 • ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பது அவர்கள் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.
 • பாதாம் சுவை கொண்ட பாலை ஜீரணிக்க முடியாதவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம்.
 • பொதுவாக ஏற்கனவே சளி பிடித்து இருப்பவர்கள் பாதாம் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்