உடல் எடைக் குறைப்பிற்கும் தூக்கத்திற்கும் நேரடியாக தொடர்பு உள்ளதை அறிவீர்களா?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

அதிகரித்த உடல் எடையைக் குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்ட போதிலும் முறையான தூக்கமின்மையானது உரிய பெறுபேற்றினை தர முடியாது.

காரணம் உடல் எடை அதிகரிப்பிற்கும் தூக்கத்திற்கும் நேரடியான நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

நன்றாக தூங்காவிடின் உடலில் சுரக்கப்படும் GLP-1 எனும் ஹோர்மோன் குறைந்த அளவிலேயே சுரக்கப்படும்.

இது உணவில் திருப்தியை ஏற்படுத்தும் ஹோர்மோன் ஆகும்.

இதன் காரணமாக அதிகளவு உணவை உள்ளெடுக்க நேரிடும்.

இவ் அதிக உணவு உள்ளெடுப்பானது மீண்டும் உடல் எடை அதிகரிப்பதை தூண்டும்.

European Congress of Endocrinology மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று குறைந்தளவு தூக்கமானது நேரடியாக கிரெலின் எனப்படும் பசியைத் தூண்டும் ஹோர்மோனையும் பாதிக்கின்றது.

மேலும் கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வுகளின்படி 7 மணிநேரத்திலும் குறைவாக தூங்குபவர்களில் உடற்திணிவு சுட்டியின் சராசரியானது அதிகரித்து காணப்படுகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் சிறப்பான தூக்கத்தினையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்