காலை வேளைகளில் முதல் வேலையாக நீர் அருந்துவது அவசியமா? அறிந்துகொள்ளுங்கள்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
372Shares

உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு நீரான அத்தியாவசியமானதாக இருக்கின்றது.

அத்துடன் நமது உடலின் 70 சதவீதமான பகுதி நீரினாலேயே ஆக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில் நீர் அருந்துவதானது பல்வேறு நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.

உதாரணமாக அன்றாடம் உள்ளெடுக்கப்படும் கலோரியின் அளவை குறைக்கின்றது.

அதாவது நீரை குடிக்கும்போது அது வயிற்றை நிரப்புகின்றது.

எனவே மேலதிக உணவு உள்ளெடுக்கப்படுவதை தவிர்ப்பதன் மூலம் மேலதிக கலோரிகள் உடலில் சேர்வதை தடுக்கின்றது.

இதனால் உடல் பருமனாவது தவிர்க்கப்படுகின்றது.

அதேபோன்று காலையில் நீர் அருந்துவதால் உடலில் இருந்து இழக்கப்பட்ட நீரை மீள் நிரப்புகின்றது.

காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்கும்போது அது மஞ்சள் நிறமாக வெளியேறுவதிலிருந்து நீர் இழக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம்.

எனவே இதனை தவிர்ப்பதற்கு காலையில் நீர் அருந்துதல் சிறந்தாகும்.

தவிர நச்சுக்களை உடலிலிருந்து அகற்றுவதற்கு பெரிதும் உதவுகின்றது.

அதாவது மனித உடலிலுள்ள நச்சுக்களை அகற்றும் அங்கங்களில் ஒன்றாக சிறுநீரகம் காணப்படுகின்றது.

இதன் மூலம் சிறுநீருடன் கலந்து பல்வேறு நச்சுக்கள் அகற்றப்படுகின்றன.

எனவே காலை வேளையில் நீர் அருந்துவதனால் அது சிறுநீராக வெளியேறும்போது நச்சுக்களையும் உடலிலிருந்து அகற்றும்.

இவ்வாறான காரணங்களுக்காக காலை வேளையில் நீர் அருந்துவது வரவேற்கத்தக்கதாகும்.

எனினும் காலை வேளையில் அவசியம் நீர் அருந்து வேண்டும் என்பதற்கான எந்தவித தெளிவான ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்