ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு வீடாதீங்க... ஆபத்தை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
622Shares

உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன.

இதற்கு முதல் வழி உணவு முறையே ஆகும். ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை உட்கொள்ள கூடாது.

மீறி அந்த உணவுகளை உட்கொண்டால் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பாரப்போம்.

foundation.chestnet.org

  • ஆஸ்துமா நோயாளிகள் பால் பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் ஆஸ்துமாவை தூண்ட வாய்ப்புள்ளது. அதுவும் பால் பொருட்களான ஐஸ் க்ரீம், யோகர்ட், சீஸ் போன்றவை ஆஸ்துமாவை தூண்டக்கூடியவை.

  • முட்டைகள், சிட்ரஸ் பழங்கள், கோதுமை மற்றும் சோயா பொருட்கள் போன்றவை ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுப் பொருட்கள் தங்களது டயட்டில் இருந்து நீக்குவதே நல்லது.

  • சிட்ரஸ் பழங்கள் சிலருக்கு ஆஸ்துமாவைத் தூண்டக்கூடும். அதேப்போல் சோயா பொருட்கள் மற்றும் கோதுமையும் சில சமயங்களில் ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் உட்கொண்டால், அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் இதர உட்பொருட்கள் அலர்ஜியை தூண்டிவிடும். குறிப்பாக அடிக்கடி ஆஸ்துமாவினால் கஷ்டப்படுபவர்கள், இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

  • காபி, டீ, சாஸ் மற்றும் மது பானங்கள் போன்றவை எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால், அது ஆஸ்துமா தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • நட்ஸை ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால், அது தீவிரமாக்கி, நிலைமையை மோசமாக்கும். எனவே நட்ஸ்களில் இருந்து விலகியே இருங்கள்.

  • ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொண்டால், அது ஆஸ்துமாவின் தீவிரத்தை இரு மடங்கு ஆக்குகின்றது. குறிப்பாக இந்த விளைவு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்