மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படாமல் தடுக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெண்களுக்கான பிரச்சனைகளில் மாதவிடாய் காலமும் ஒன்று. இதனால் பெண்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக அடிவயிற்று வலி.

உடலில் சூடு அதிகரிப்பதால் தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது.

குறிப்பாக நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது, காற்றோட்டமில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப்பையைப் பாதிக்கும்.

இதனால் மாதவிடாய் நாள்களில் அடிவயிற்றில் வலி ஏற்படுகின்றது.

இதனை குறைக்க கண்ட கண்ட மருந்துகளை போடுவதை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டும், பழங்களை கொண்டு இதன் வலியை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க கீழ் குறிப்பிட்ட முறைகளை செய்தாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

Google

  • வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும்.
  • மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.
  • அவித்ததோ அல்லது பச்சையாகவோ மாங்கொட்டை, மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.
  • நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.
  • செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும். ஏனெனில் அதில் இருக்கும் வைட்டமின் சி எலும்புகளுக்கு வலிமைச் சேர்க்கும்.
  • கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
  • மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம்.
  • வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.
  • அதிக ரத்தப்போக்கு மற்றும் வலியைத் தடுக்க, சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்