காது வலியால் பெரும் அவதியா? இதை மட்டும் செய்து பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஜலதோஷம் பிடித்து விட்டாலே போதும் பல நோய்களை நம்மை வந்து ஒட்டி விடுகின்றது. இதில் காதுவலி முக்கிய இடம் வகிக்கின்றது.

காது வலி பாக்டீர்யா மற்றும் வைரஸ் தாக்குதலால் கூட ஏற்படுகின்றது. மற்றும் காதுவலி ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதில் நம்முடைய மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுப் பகுதிக்குச் செல்லுகின்ற குழாயில் அடைப்புகள் ஏற்பட்டு, நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்த் தொற்றுக்களினால் தான் காது வலி ஏற்படுகிறது.

அதேபோல தொண்டையில் ஏற்படுகின்ற அழற்சி காரணமாகவும் காதுவலி ஏற்படலாம். நோய்க்கிருமிகளின் தாக்கத்தினால் காது வலி உண்டாகிறது.

அதுமட்டுமின்றி சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அவர்களுக்கும் காதுவலி எளிமையாக வந்துவிடும்.

இதனை போக்க சரி செய்ய கீழ் காணும் வைத்திய முறைகளில் பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

medinaction

 • இரண்டு பூண்டு பற்களை எடுத்து கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது எண்ணெய்யை லேசாக சூடேற்றி பூண்டு கறுப்பாக மாறும் வரை காய்ச்சி ஆற விடவும். இப்பொழுது இந்த எண்ணெய்யை காதில் 2-3 சொட்டுகள் விட்டால் உங்கள் காது தொற்று குணமாகும்.

 • 3 கிராம் ஓமம் மற்றும் நசுக்கிய பூண்டு பற்கள், 30-40 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் எல்லாம் சேர்த்து காய்ச்ச வேண்டும். பூண்டும், ஓமமும் சிவப்பாக மாறும் வரை சூடுபடுத்தி ஆற விடவும். பிறகு இந்த எண்ணெய்யை காது சொட்டு மருந்தாக பயன்படுத்தி வாருங்கள்.

 • கொஞ்சம் துளசி இலைகளை நசுக்கி அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். சாற்றை நன்றாக சக்கை இல்லாமல் வடிகட்டி கொண்டு வடித்து அதை 2 சொட்டுகள் காதில் விடவும்.

 • கிராம்பை நல்லெண்ணெய்யில் போட்டு வதக்கி இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை சில சொட்டுகள் காதில் ஊற்ற வலி குறையும். கிராம்பு வலி நிவாரணியாக செயல்படும்.

 • வெதுவெதுப்பான கடுகு எண்ணெய்யை கூட காதில் ஊற்றி வர தொற்று குறையும். கடுகு எண்ணெய் நிறைய நோய்த் தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. புண்களையும் ஆற்றும் ஆற்றல் மிக்கது.

 • நசுக்கிய பூண்டு பற்கள், 1 டீ ஸ்பூன் வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டையும் சேர்த்து காய்ச்சி காதில் ஊற்றி வரலாம்.

 • வெதுவெதுப்பான இஞ்சி சாற்றை கூட பாதிக்கப்பட்ட காதில் ஊற்றி வர நல்லா வலி குறையும்.

 • வெங்காயத்தின் சாற்றை பிழிந்து, அதை காட்டன் பஞ்சில் நனைத்து அதை காதில் பிழிந்து விட அழற்சி மற்றும் மைக்ரோ பியல் தொற்றால் ஏற்பட்ட அரிப்பு, சிவத்தல், வலி குணமாகும்.

 • 1/4 பங்கு அளவு இனிப்பு பாதாம் பருப்பு எண்ணெய்யை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக காதில் ஊற்றி காதை சுற்றி இருக்கும் பகுதிகளில் லேசாக மசாஜ் செய்து விடவும். இதை நீங்கள் ஆலிவ் ஆயிலில் கூட செய்யலாம்.

 • வொயிட் வினிகர், ரப்பிங் ஆல்கஹால் இரண்டையும் சேர்த்து காதுகளில் சொட்டு விட வேண்டும். பிறகு ஒரு காட்டன் பஞ்சை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு காதை மூடி விட வேண்டும். இந்த முறையை காது பிரச்சினை குணமாகும் வரை செய்து வாருங்கள்.

 • பார்சிலி பார்சிலி ஆயில் அல்லது பார்சிலி இலைகளின் ஜூஸை எடுத்து லேசாக காய்ச்சி காட்டன் மூலம் காதில் ஊற்றி வர வலி குணமாகும்.

 • எலுமிச்சை லேசான வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு அல்லது வெங்காய சாற்றை காட்டன் உல் ப்ளக் மூலம் பாதிக்கப்பட்ட காதில் ஊற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தொற்று விரைவில் குணமடைந்து விடும்.

 • கசாயம் 4 பூண்டு பற்களை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் அந்த தண்ணீரை நன்றாக சூடுபடுத்தி பிறகு வேக வைத்த பூண்டை நசுக்கி அதில் கொஞ்சம் 1டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட்டை குலைத்து இதை ஒரு துணியில் தடவி பாதிக்கப்பட்ட காதில் வைத்து கொள்ளுங்கள். இது காதில் ஏற்பட்டுள்ள தொற்று குணமாகி விரைவில் வலி குறைந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்