தைராய்டு தொடர்பான பிரச்னைகள் தற்போது அதிகமாகக் காணப்படுகின்றன.
இதற்கு பிரதான காரணங்களுள் ஒன்றாக உணவுப் பழக்க வழக்கம் அமைந்துள்ளது.
இதனால் தைராய்ட்டின் ஆரோக்கியம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
கழுத்தின் கீழ் பகுதியில் உள்ள வண்ணத்துப் பூச்சி வடிவிலான சுரப்பிலிருந்தே தைரொயிட் சுரக்கப்படுகின்றது.
இது வளர்ச்சி, மெட்டாபோலிசம் மற்றும் உடல் உஷ்ணத்தை பேணல் போன்றவற்றிற்கு உதவுகின்றது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தைராய்ட்டின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பின்வரும் 3 வகையான எண்ணெய்களை பயன்படுத்த முடியும்.
எலுமிச்சை எண்ணெய் (Lemongrass oil)
இது பங்கஸ் மற்றும் அழற்சிக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.
இவ் எண்ணெயில் சிறிதளவினை எடுத்து கழுத்தின் கீழாக வீங்கிய பகுதியில் மசாஜ் செய்துவர தைரொயிட் பிரச்னை குணமாகும்.
சுண்ணாம்பு எண்ணெய் (Frankincense oil)
நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் இவ் எண்ணெயும் தைரொயிட் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
Myrrh எண்ணெய் (Myrrh oil)
ஏனைய எண்ணெய்களைப் போன்று இவ் எண்ணெயும் வீக்கத்தினை குறைக்கின்றது.
இதன் இரு அல்லது மூன்று துளிகளை எடுத்து வீங்கிய தைரொயிட் பகுதியில் மசாஜ் செய்வதன் மூலம் வீக்கத்தினை குறைக்க முடியும் என ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.