கைகள், பாதங்கள், கால்கள், கணுக்கால்கள் மற்றும் மூட்டுகளில் அதிகமான நீர் தேங்கியிருப்பதனால் அடிக்கடி வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படுகின்றது.
கால் வீக்கம் ஏற்பட ஒரு முதன்மை காரணமாக இருப்பது சிறுநீரகங்களில் ஏற்படும் கோளாறுகள் ஆகும்.
இப்பிரச்னையால் அவதியுறுபவர்களுக்கு அவ்வப்போது கால்களில் வீக்கம் ஏற்படும்.
வயிற்று வலி, குமட்டல், வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மூட்டுகளில் விறைப்பு, பலவீனம், பார்வை அசாதாரணங்கள், வீங்கிய சருமம் போன்ற அறிகுறிகள் நீர்கோர்வையினால் ஏற்படுகிறது.
அந்தவகையில் சிறிய அளவிலான நீர்கோர்வையாக இருந்தால் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி வீக்கத்தை குறைக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

- ஒரு கப் எப்சம் உப்பை குளியல் நீரில் கலந்து கொள்ளவும். பின்பு, அந்த நீரில் உங்களை கால்களை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதேபோன்று, வீக்கம் குறையும் வரை தொடர்ந்து தினமும் செய்யவும்.
- வெறும் கைகளை கொண்டு கால்களில் பொறுமையாக மேல்நோக்கி மசாஜ் செய்து, சிறிது அழுத்தத்தை கொடுத்தாலே போதும், கால்களில் தேங்கிய தேவையற்ற நீர் நீங்கி வீக்கமும் படிபடியாக குறையும், கால்களுக்கும் சுகமாக இருக்கும்.
- அரை துண்டு இஞ்சியை நசுக்கி, ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த டீ மிதமான சூட்டில் இருக்கும் போது குடிக்கவேண்டும். இது நீர்கோர்வையால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும்.
- 4 முதல் 5 துளிகள் தேயிலை எண்ணெயை பஞ்சில் தொட்டு, வீக்கம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் சருமம் மிகவும் மென்மையானது என்றால், தேயிலை எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து உபயோகிக்கலாம். நாள் ஒன்றிற்கு 2 முறை இதனை தொடர்ந்து செய்யலாம்.
- ஒரு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 3 கப் மல்லி விதைகளை சேர்க்கவும். நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்கவிடவும். பின்பு, அதை வடிகட்டிவிட்டு, தினமும் 2 முறை பருகவும்.
- ஒரு சுத்தமான துணியை எடுத்து, மிதமான சூடுள்ள நீரில் நனைத்து, அதனை வீக்கமுள்ள இடத்தை சுற்றி கட்டவும். இப்படியே 5 நிமிடங்கள் விட்டுவிடவும். வீக்கம் குறைவதை பார்க்கலாம்.
- அரை கப் கடுகு எண்ணெயை மிதமாக சூடு செய்து, வீக்கம் உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். தினமும் 2 முறை இதை தொடர்ந்து செய்து வரவும்.