ஆண்களே! ஆண்மைக்குறைவு பிரச்சினையால் கஷ்டப்படுறீங்களா? இதோ சில எளிய வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
944Shares

ஆண்மை குறைபாடு என்பது ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஹார்மோன்களில் ஏற்படும் இடையூறு காரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தம் கூட ஆண்மை குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

அதிகப்படியான உடற்பயிற்சி, அதிகப்படியான உடற்சூடு, சரியான நிலையில் வளராத விதை பைகள் போன்ற முக்கிய காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இராசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத் துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதனை தடுக்க கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதை விட இயற்கை வைத்தியங்கள் மூலம் சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது ஆண்மை குறைபாடு தடுக்க சில இயற்கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

 • 3 கிராம் இலவங்கப்பட்டைப் பொடியை பாலில் கலந்து படுக்கும் முன் பருகி வரவும்.

 • முருங்கைப்பூ ஒரு தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு போரீச்சம்பழம் இரண்டு, பொடி செய்த நான்கு பாதாம் பருப்பு, ஒரு சிட்டிகை குங்குமப்பூ, இவைகளை நீரில் கலந்து 2 - 3 மாதங்கள் தினம் 3 வேளைற சாப்பிட வேண்டும்.

 • ஒரு தேக்கரண்டி அளவு அமுக்கிராப்பொடியை பாலில் கலந்து பருகி வர விந்தணு அதிகரித்து ஆண்மைக்கூடும்.

 • ஆலம்பூ, அத்திமரப்பட்டைப்பொடி, சர்க்கரை மூன்றையும் சம அளவு எடுத்தக்கொண்டு, தேனில் கலந்து சாப்பிட்டுவர விந்து கெட்டியாகி ஆண்மை அதிகரிக்கும்.

 • பசலைக்கீரை சமைத்து உண்ண பாலுணர்வு கூடும்.

 • முள்கத்தரி வேர்களின் தோல்சீவி தோலை மட்டும் விழுதாக அரைத்து பசும்பாலில் கலந்து பருகிவர வேண்டும்.

 • பரங்கிச்சக்கை உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்.

 • பூலான்கிழங்குகளை நீர்விட்டு அரைத்து விழுதாக்கி தினமும் 2 வேளை சாப்பிட்டு வரலாம்.

 • பூனைக்காலி வேர்க்கஷாயம் அருந்திவர ஆண், பெண் குறிகளின் தளர்ச்சி நீங்கும்.

 • நன்னாரி வேரை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை மட்டும் அருந்திவர ஆண்மைக்குறைவு நீங்கிம்.

 • அரசம்வேர்,பட்டை, மொக்குகள் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, இடித்து பாலில் கொதிக்க வைத்து சுவைக்கு சர்க்கரை சேர்த்து 2 தேக்கரண்டி அளவு காலை, மாலை பருகிவர வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்