பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா? அதனை தடுக்க இதோ சில எளிய வழிகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
762Shares

இன்றைய கால பெண்களுக்கு யோனியில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் பொதுவான பிரச்னை ஆகும்.

துர்நாற்றம் அடிக்க முக்கிய காரணம் தடிமனான, வெள்ளை வெளியேற்றத்தின் விளைவாக யோனி ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி கர்ப்பம், தாய்ப்பால் அல்லது மாதவிடாய் காரணமாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு யோனியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளால் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் வெளியேற்றத்தை ஒரு துர்நாற்றத்துடன் ஏற்படுத்துகின்றன.

மேலும் பாக்டீரியா தொற்றின் காரணமாக மீன் துர்நாற்றம் வீசுகிறது.

அதிகப்படியான வெள்ளை வெளியேற்றம், வெளியேற்றத்தின்போது துர்நாற்றம், உலோக வாசனை வெளியேற்றம் அடர்த்தியான, வெள்ளை வெளியேற்றம், மீன் துர்நாற்றம், பச்சை அல்லது மஞ்சள் வெளியேற்றம், யோனியில் அரிப்பு அல்லது வலி, அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலி, உடலுறவின் போது வலி போன்றவை பெண்களின் யோனி துர்நாற்றத்திற்கான அறிகுறிகள் ஆகும்.

அந்தவகையில் இந்த துர்நாற்றத்தை போக்க சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேயிலை மர எண்ணெய்
shutterstock

தேயிலை மர எண்ணெயில் மூன்று முதல் நான்கு துளிகள் தண்ணீரில் கலந்து யோனி பகுதியில் கழுவ வேண்டும்.

ஆலிவ் எண்ணெயில் 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெயையும் கலந்த கலவையில் ஒரு டம்பனை நனைத்து உங்கள் யோனிப்பகுதியில் டம்பனை செருகலாம். ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.

தேயிலை மர எண்ணெய்யை தண்ணீரில் கலந்து தினமும் அல்லது வாரத்திற்கு பல முறை யோனிப்பகுதியில் கழுவ வேண்டும்.

அன்னாசி பழம்
Google

வழக்கமாக உண்ணும் உணவில் அன்னாசி மற்றும் அன்னாசி பழச்சாறு சேர்க்க வேண்டும். அன்னாசி பழத்தை நீங்கள் அடிக்கடி உண்ண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் அன்னாசி பழச்சாறு ஒரு சில நாட்களுக்கு குடிக்கலாம். அன்னாசிப்பழத்தின் அதிக சர்க்கரை மற்றும் அதிக நொதி உள்ளடக்கம் உங்கள் யோனி சுரப்புகளின் வாசனையை மேம்படுத்துகிறது.

பேக்கிங் சோடா
istockphoto.com/ThamKC

உங்கள் குளியல் பேக்கிங் சோடாவைச் சேர்த்து, கீழ் உடல் பகுதியை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கப் பேக்கிங் சோடாவை 2 கப் தண்ணீரில் கலந்து யோனி பகுதியில் பயன்படுத்தலாம். அல்லது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவையும் சேர்த்து குடிக்கலாம்.

வினிகர்
shutterstock

குளியல் நீரில் இரண்டு கப் வினிகரை கலந்து அதில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 8 அவுன்ஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

ஒரு டீஸ்புன் வினிகரை ஒரு டம்பளர் தண்ணீரில் கலந்து அதை துணியில் நனைத்து யோனிப்பகுதியில் பயன்படுத்தலாம். துர்நாற்றம் வீசும் வரை நீங்கள் தினமும் இவ்வாறு செய்யலாம்.

பூண்டு
Google

பூண்டின் தோலை உரித்து 5 அல்லது 6 பல்லை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு முழம் அளவுள்ள நூலை கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை யோனி பகுதியில் உள்ளே வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை எடுத்துவிட வேண்டும்.

தயிர்
Google

யோனியின் இயல்பான pH ஐ மீட்டெடுக்க ஒரு நாளைக்கு இரண்டு கப் தயிரை சாப்பிடுங்கள்.

தயிரில் டம்பனை நனைத்து மெதுவாக யோனி பகுதிக்குள் வைக்கலாம். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து அதை அகற்றி வெந்நீரிலால் அப்பகுதியை துடைக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்