ஒற்றைத்தலைவியால் அவதியா? அதனை தடுக்க இதோ சில எளிய வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
355Shares

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள்.

இது 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். வலி வருவதைச் சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம்.

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும்.

இதைக் குறைக்க மாத்திரை, மருந்துகள் இருந்தாலும், சில இயற்கை முறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் சரிசெய்ய முடியும்.

அந்தவகையில் ஒற்றைத்தலைவலியை போக்க கூடிய சில இயற்றை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

  • ஒற்றைத்தலைவலிக்கு நெற்றிப்பொட்டில் பொடுதலை இலைப்பற்று பூசி வர குணமாகும்.

  • மிளகை நெய்யில் அரைத்துச் சாப்பிட்டு வர குணமாகும்.

  • மருதாணி இலைச்சாறெடுத்து நெற்றியில் பூசி வர குணமாகும்.

  • பூண்டுப் பற்களை நன்கு இடித்து சாறுடன் நெற்றியில் தடவ வேண்டும்.

  • 200 கிராம் வெல்லம், 100 கிராம் நெய், இரண்டையும் நன்கு கலந்து சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி ஓடிப்போகும்.

  • புராக்கோலியை வேகவைத்து, அத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் உப்பை சேர்த்தும் சாப்பிடலாம்.

  • நெற்றியில் புள்ளடி இலைச்சாறு பூசிக்கொள்ள ஒற்றைத் தலைவலி குணமாகும்.

  • காக்கணவேர் (விஷ்ணுகிராந்தி) விதைகளை இடித்து சாறெடுத்து 2 சொட்டுகள் மூக்கு துவாரத்தில் சொட்ட ஒற்றைத் தலைவலி ஓடிப்போகும்.

  • அகத்தி இலைகளின் சாறு பிழிந்து எதிர்மூக்குத் துவாரத்தில் சொட்டிவர குணமாகும்.

  • எட்டித் தளிர்களை சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து அரைலிட்டர் நல்லெண்ணையை நன்கு காய்ச்சி அத்துடன் 10 கிராம் மிளகுத்தூள் 10கி. பூண்டுப் பற்கள் சேர்த்து அரைத்த விழுது இவற்றுடன் எட்டிப்பொடி கலந்து எண்ணெய் சிவப்பு நிறமாக மாறும் வரை காய்ச்சி பின் ஆறவைதடது குப்பிகளில் நிரப்பி வைத்து தினமும் இரு தேக்கரண்டி அளவு உச்சந்தலையில் சூடுபறக்க தேய்த்து குளிக்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்