செரிமானம் ஆகாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான எளிய வீட்டு வைத்தியம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நேரம் தவறி சாப்பிடுவது, மசாலா பொருட்கள் அதிகம் எடுத்துக்கொள்வது இப்படி பல காரணங்களால் செரிமானத்தில் சிக்கல் எழலாம்.

இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம், புளித்த ஏப்பம் தொடங்கி பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

இவற்றுக்கு மிக எளிமையான முறையில் வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.

நெல்லிக்காய் மருத்துவம்

நெல்லிக்காயை பசையாக அரைத்து, அதிலிருந்து சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி சாறு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து பாகுபதத்தில் எடுக்கவும்.

இதை ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த பாகு ஒரு பங்குக்கும், 3 பங்கு நீரும் சேர்த்து குடித்துவர செரியாமை, புளிஏப்பம், வயிற்று உப்புசம் ஆகியவை குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மருத்துவம்

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, இதனுடன் வெள்ளை வெங்காயத்தின் பசை, சோற்றுக்கற்றாழையின் தோலை சீவி எடுக்கப்பட்ட பசை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இதை வடித்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். உணவுப்பாதையில் ஏற்படும் உபாதைகளான அல்சர், வாயு தொல்லை போன்றவை சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்