சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது ஆகும்.
அந்தவகையில் சிறுநீரகத்தையும் இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும் ஓர் அற்புத ஜுஸ் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாசி பழச்சாறு - 1 டம்ளர்
கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
புதினா - சிறிது
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை
முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை மிக்ஸி அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1/2 கப் நீர் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதோடு எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து விட வேண்டும்.
அடுத்து அத்துடன் அன்னாசிப் பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால், ஜூஸ் ரெடி!
நன்மை
Google
கற்றாழை இயற்கையாகவே அல்கலைன் தன்மை கொண்டது. இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட செய்யும் மற்றும் குடலியக்கப் பிரச்சனைகளைத் தடுக்கும்.
இரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேறச் செய்வதுடன், சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
கற்றாழை அன்னாசி ஜூஸ் உட்காயங்களைக் குறைக்கும் மற்றும் குறிப்பிட்ட வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.