குப்பைக்கு செல்லும் சீதாப்பழ விதைகளில் இவ்வளவு நன்மை இருக்கா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
குப்பைக்கு செல்லும் சீதாப்பழ விதைகளில் இவ்வளவு நன்மை இருக்கா?

சீதாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும்.

வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீதாப்பழம்.

அதைபோல் தான் அதில் உள்ள விதைகளுக்கு உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தருகின்றது.

அந்தவகையில் சீதாப்பழத்தின் கொட்டைகள் வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

pinterest
  • சீதாபழ விதைகளை மிக்ஸியில் நன்கு அரைத்து பவுடராக்கி தண்ணீரில் கலக்குங்கள். அதை இரண்டு நட்களுக்கு ஊற வைத்து பூச்சிகள் இருக்கும் இடத்தில் தெளியுங்கள்.நொடியில் பலன் கிடைக்கும்.
  • சீதாப் பழ விதைகள் கருக்கலைப்பு செய்யும் குணம் கொண்டது. எனவே கருக்கலைப்பு மருந்துகளில் இந்த சீதாபழ விதைகளும் பயன்படுத்தப்படுகிறது.
  • சீதாப் பழ விதைகளை மைய அரைத்து அதை பேஸ்ட் போல் கலந்து தலையில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து தலைக்குளிக்க பேன் தொல்லை நீங்கும். இதை வாரம் இரண்டு முறை செய்து பாருங்கள்.
  • தோட்டம் அமைத்திருந்தால் அதற்கு பூச்சிகள் வராமல் இருக்க சீதா பழ விதைகளை நன்கு அரைத்து அதை மண் மற்றும் செடிகளில் தூவினால் இலைகளை அரிக்கும் பூச்சிகளைக் கொல்லும்.
  • சீதாபழத்தின் விதைகளில் ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால் அவை எரிவாயுவை உற்பத்தி செய்கின்றன.
  • சீதாபழத்தின் விதைளை வைத்து மீன் பிடிக்கவும் பயன்படுத்துகின்றனர். இந்தக் விதைகளில் ஒருவிதமான நச்சுக் கலந்திருப்பதால் அவை மீன்களுக்கு ஒவ்வாததாக இருக்கிறது. அதனால் அவை வெளியே தானாக வந்து வலையில் சிக்கிக் கொள்கின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்