தினமும் கொஞ்சம் புளியை பச்சையாக சாப்பிடுங்க... இந்த பிரச்சினை எல்லாம் சரியாயிடுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

அன்றாடம் நமது சமயலுக்கு பயன்படுத்து ஓர் பொருள் தான் புளி. இது வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு.

புளியை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு வந்தாலே ஏகப்பட்ட பிணிகளை ஓட்ட முடியும்.

இதில் வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த புளியை தினமும் கொஞ்சம் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறைப்பு முதல் மலச்சிக்கலை வரை தீர்வு தருகின்றது.

அந்தவகையில் தற்போது இதன் வேறு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • புளியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், டார்டாரிக் அமிலம் போன்றவை நாள்பட்ட மலச்சிக்கலை போக்கி மலம் கழித்தலை இலகுவாக்குகிறது. இதுவரை உங்களுக்கு தீராத வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புளியமரத்து இலையை சாப்பிட்டால் குணமாகி விடும்.

  • நாள்பட்ட அழற்சியை போக்க புளிக்கரைசல் அல்லது புளியை பயன்படுத்தி டீ போட்டு அதில் தேன் சேர்த்து தினமும் குடித்த வரலாம். நல்ல முன்னேற்றம் தரும்.

  • புளியை கிருமி நாசினியாக பயன்படுத்திக் கொள்ளலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு கூட இந்த புளியை அரைத்துத் தடவினால் வீக்கம் உடனே குறைந்து விடும்.

  • புளியில் இதய ஆரோக்கியத்தை காக்கும் ப்ளோனாய்டுகள், பாலிபீனால்கள் போன்றவைகள் உள்ளன. இதனால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலைக் கரைப்பதில் மிக வேகமாக செயலாற்றும்.

  • கல்லீரல் நச்சுத்தன்மையை போக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க புளி ஒரு சிறந்த தேர்வு. ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்புகளை கல்லீரலில் இருந்து வெளியேற்றவும் இது உதவுகிறது.

  • கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்துக் கொள்ளும் போது குமட்டல் வாந்தி ஓரளவுக்கு குறையும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் தொல்லையால் பாதிக்கப்படுவர். அதற்கும் புளி ஒரு மலமிளக்கியாக அமையும். குமட்டலை தடுக்க புளிச்சாற்றை சுவைக்கலாம்.

  • 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை 10 - 15 நிமிடங்கள் முகத்தில் அப்ளே செய்யுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் நீங்கிய பளபளப்பான முகத்தை பெறலாம்.

  • புளியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து வெந்நீரில் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். ஏனெனில் புளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது.

  • புளி நமது லிப்பிட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி தேங்கியுள்ள கொழுப்பை பயன்படுத்த உதவி செய்கிறது. இதனால் கொழுப்புகள் எரிக்கப்பட்டு எளிதாக எடையை குறைக்க முடிகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்