வீட்டில் இருக்கும் இந்த புளிப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதும்! உங்க உடம்பில் நம்ப முடியாத அதிசயம் நடக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலத்தில் பலரும் உடல் பருமன் பிரச்சனையால் நாள்தோறும் அவதிப்படுவதுண்டு.

இதற்கு முக்கிய காரணமே நம்முடைய வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான்.

இதற்காக பலர் பல வகை டயட்டுகள், கடின உடற்பயிற்சிகள், உடல் எடை குறைக்கும் மருந்துகள் போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் உடல் பருமனை சில உணவுகள் மூலம் குறைக்க முடியும். அதிலும் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுவதனால் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.

அந்த வகையில் ஆரோக்கியமான எடை இழப்பை அதிகரிக்க இந்த புளிப்பு சுவை கொண்ட உணவுகளை பற்றி இங்கு பார்ப்போம்.

Weight Loss Programs Market
 • எலுமிச்சை நீர் உங்களை புத்துணர்ச்சி பெற ஊக்குவிக்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்பை அதிகரிக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
 • ஆரஞ்சு பழம் பூஜ்ஜிய கொழுப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகவும் இருக்கிறது. இது சிறந்த எடை இழப்பை உங்களுக்கு வழங்கும்.
 • புளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் வாரத்திற்கு ஒரு முறை உட்கொண்டால் உங்கள் எடை குறையும். கொழுப்பை குறைக்க உதவும் கறியில் புளியை சேர்த்து உண்ணலாம்.
 • தினமும் கொழுப்பு இல்லாத தயிரை உட்கொண்டால், அது வயிற்றுப் பகுதியில் கொழுப்பை இழக்க உதவும்.
 • தக்காளி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு உள்ளடக்கத்திலிருந்து விடுபடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.
 • மாங்காயை சாப்பிடுவது எடை இழப்பை ஊக்குவிக்க உதவும். ஏனெனில் பழம் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது ஆரோக்கியமான எடை இழப்பை மேம்படுத்துகிறது.
 • அன்னாசிப்பழத்தில் அதிக அளவு ப்ரொமைலின் அமிலம் உள்ளது. இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்ட பிறகு பழம் செரிமானவுடன் கொழுப்பை எரிக்கிறது.
 • நெல்லிக்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடல் பருமனான நபர்களின் எடை இழப்பை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.
குறிப்பு
 • புளிப்பு உணவுகள் எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் அதே வேளையில், புளிப்பு உணவுகளை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குளிர் மற்றும் இருமலை அதிகரிக்கும்.
 • புளிப்பு உணவுகள் இரவில் உங்கள் எடை இழப்பை தடுக்கக்கூடும். ஏனெனில் இது தண்ணீரைத் தக்கவைக்கும். மேலும், இந்த உணவுகளை மட்டும் உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்க உதவாது அல்லது ஆரோக்கியமாக இருக்காது.
 • எப்போதும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்