சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்களில் ஏற்படும் புண்கள் எப்படி தடுப்பது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் ஏற்பட்டால் அவை ஆறுவது நீண்ட நாள் எடுக்கும் என்ற அச்சம் காணப்படும்.

குறிப்பாக நரம்பு பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை, இரத்தக்குழாயில் அடைப்பினால் கால் அல்லது விரல்களுக்கு இரத்த ஓட்டம் குறைவு ,இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது அல்லது காலணிகளே இல்லாமல் நடப்பது போன்றவற்றதல் இப்படி புண்கள் வருகின்றது.

இது பல நேரங்களில் விரல்களையோ காலையோ இழக்க நேரிடலாம். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

அந்தவகையில் இவற்றை தடுக்க என்ன செய்யலாம்? இதற்கு என்ன தீர்வு என்பதை பற்றி இங்கு பார்ப்போம்

எப்படி தடுப்பது?
  • தினமும் கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • எப்போதும் செருப்பு அணிந்து நடக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மென்மையான செருப்புகளை பயன்படுத்த வேண்டும்.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
  • சிறிய காயம், புண் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
என்ன தீர்வு?
  • புண்கள் சிறியதாக, ஆழமின்றி இருந்தால் மருந்து கொண்டும், மருந்து வைத்து கட்டுப்போட்டு ஆற்றலாம்.
  • புண்கள் ஆழமாக இருந்தாலோ, ஆழத்தில் உள்ள எலும்பு, தசை நார் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
  • புண்கள் பெரிதாக இருந்தால் அவற்றை ஆற்ற பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படலாம்.
  • கருப்பாகி விட்ட விரல்களோ, பாதத்தின் பகுதிகளோ அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்