சாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா? இதற்கு 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்மில் சிலருக்கு அடிக்கடி சாப்பிட்டவுடன் வயிறு உப்பின மாதிரி காணப்படும்.

இது போன்ற வயிற்றுப் பிரச்சனை வர காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவதனால் தான்.

இதற்காக அடிக்கடி நாம் மருத்துவரிடமும், மருந்தகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதில் சரி செய்ய முடியம்.

அந்தவகையில் வயிற்று பிரச்சனையை கற்றாழை ஜெல் மற்றும் தேன் கொண்டே சரி செய்யலாம் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இதனை கொண்டு வயிற்று பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • 1 கற்றாழை இலை
  • 2 டேபிள் ஸ்பூன் தேன் (50 கிராம்)
  • 1 கப் தண்ணீர் (250 மில்லி லிட்டர்)
பயன்படுத்தும் முறை

முதலில் கற்றாழை இலையை எடுத்து அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து அதை நன்றாக கழுவி விட்டு தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதிலுள்ள மஞ்சள் கசடுகளை நீக்கி கொள்ளுங்கள். ஏனெனில் இது கசப்பாக அதிக மணத்துடன் இருக்கும். எனவே கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 3-5 தடவை என சாப்பிடுவதற்கு முன் குடித்து வாருங்கள். 7 நாட்களுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்.

குறிப்புகள்

இந்த ஜூஸ் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். ஏனெனில் இது ஒரு மலமிளக்கி ஆகும். அப்படி இருந்தால் குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

Boldsky

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers