இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தால் கூட சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்... இந்த நோய்க்கான அறிகுறியாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சக்கரை நோயாளிகள் சிலருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் இதனை ஹைப்பர் க்ளைசீமியா என்று அழைக்கப்படுகின்றது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

குறிப்பாக இது உயிருக்கே உலை வைக்கும்படி சிறுநீரகம், மூளை, கண்கள், கால்கள், பாதம் போன்றவற்றை பாதிக்கும்.

இதனை சில அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்தால் போதும். இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.

அந்தவகையில் தற்போது ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம்.

Google
  • ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் உடல் வறட்சி அடையக்கூடும். உடல் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதன் முதல் அறிகுறியாக வாய் வறட்சி அதிகமாக இருக்கும்.
  • உங்களுக்கு சாதாரணமாக தாகம் எடுப்பதை விட, அதிகமாக தாகம் எடுத்தால், உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கும் போது, மிகுந்த சோர்வையும், எதையும் செய்ய முடியாத அளவில் உடல் பலவீனத்துடன் இருப்பதை உணரக்கூடும்.
  • அடிக்கடி தலைவலி வந்தால், அதற்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக தலைவலியை உண்டு பண்ணும்.
  • தலைவலி மற்றும் மங்கலான பார்வை ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் இருந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்குமாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...