தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுங்க... அற்புத பலன்களை தருமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

இவை சரும பிரச்சனை, முடிப் பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும், ரத்த சோகை, ஞாபக மறதி போன்றவற்றையும் நீக்குகிறது.

அதிலும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பாக்கை உட்கொண்டால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • கர்ப்ப காலத்தில் குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன் சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.

  • செரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.

  • நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை கொண்டவராயின், உணவு உட்கொண்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொள்ளுங்கள். இதனால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, செரிமான பிரச்சனையால் ஏற்படும் குமட்டல் அல்லது வாந்தியில் இருந்து நிவாரணம் தரும்.

  • நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

  • ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள், பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

  • தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்