உங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுகின்றதா? இதோ சில கை வைத்தியங்கள்!!!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டால் ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும்.

இது பொதுவாக பல் துலக்கும் போதோ அல்லது உமிழும் போதோ எச்சிலில் இரத்தம் தென்படுவது. மற்றும் நார்ச்சத்து மிக்க அல்லது சற்று கரடுமுரடான உணவுகளை உட்கொள்ளும் போது இரத்தம் கசியும்.

இத்தகைய ஈறுகளின் இரத்தக்கசிவை தவிர்க்க சில கை வைத்தியங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தை வழங்கி, ஈறுகளின் இரத்தக்கசிவை தடுப்பதற்கு உதவக் கூடியவையாகும்.
  • ஈறுகளில் இரத்தக்கசிவை தவிர்க்க தினமும் தவறாமல் பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  • தினமும் ஒரு பச்சைக் காய்கறியை மென்று தின்னும் பழக்கத்தை மேற்கொள்வது நலம்.
  • க்ரான்பெர்ரி சாறு அதன் ஆன்டிபாக்டீரியல் தன்மைகளை முடுக்கி விட்டு, ஈறுகளின் மேல் படிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்களை துடைத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.
  • பேக்கிங் சோடா வாயில் இருக்கக் கூடிய மைக்ரோஎன்விரான்மெண்டை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றி பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அதற்கு பேக்கிங் சோடாவை விரல்களில் தொட்டு, ஈறுகளில் தேய்த்துக் கொள்ளலாம்.
  • கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லலாம் அல்லது கிராம்பு எண்ணையை ஈறுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம். இது, பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பழமையான மற்றும் எளிமையானதொரு கை வைத்தியமாகும்.
  • பல் துலக்கும் போது, வாயை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும் வைத்திருக்கக்கூடிய புதினா எண்ணெயை உபயோகிக்கலாம்.
  • சீமை சாமந்தி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேயிலை ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதாகும்.
  • பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்து வரலாம். இது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்கான மிகச் சிறந்த கை வைத்தியமாகும்.
  • பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கும். இது ஈறுகளை வலுவாக்கி இரத்திக் கசிவிலிருந்து அவற்றை பாதுகாக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்