இன்றைய சந்ததியினர் சீரற்ற உணவுப் பழக்கத்தால் வாயு தொல்லை அடிக்கடி அவதிப்படுவதுண்டு.
இதற்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட், ஃபைபர், சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகள் அதிகமாக உண்ணுதல் போன்றவை ஆகும்.
இது பலநேரங்களில் அருகில் இருப்பவர்கள் சங்கடத்தையும் ஏற்படுத்துகின்றது.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சில உணவுகள் நாம் அன்றாடம் சாப்பிட்டாலே போதும் மருந்துகள் இன்றி எளிதில் விடுபடலாம்.
அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

- ஒரு சிறிய அளவு இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து பருகலாம்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில், அரை தேக்கரண்டி ஓமம் சேர்த்து பருகலாம்.
- புதினா தேநீரை அதன் இலைகளுடன் தயார் செய்யலாம் அல்லது சுடுநீரில் புதினாகீரை எண்ணெய் சேர்த்து பருகலாம்.
- அரை தேக்கரண்டி உப்பை மோரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
- ஒரு டீஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் விதைகளை வடிகட்டி, குளிர்ந்த பின் குடிக்கவும்.
- கற்றாழையின் மேல் தோலை வீசிவிட்டு, சிறிதுசிறிதாக நறுக்கி அதை தண்ணீர் அல்லது சில பழச்சாறுகளுடன் கலந்து பனை வெள்ளம் கலந்து குடிக்கலாம்.
- தயிரை நேரடியாக உட்கொள்ளலாம் அல்லது சிறிது தண்ணீர், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
- புதிய பப்பாளி பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதை சாறாகவும் பருகலாம்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து சாப்பிட்ட பிறகு குடிக்கவும்.
- நெல்லிக்காய் சாற்றை தயார் செய்து தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.