வாய்ப்புண்களை உடனே போக்க வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை குடிங்க!

Report Print Kavitha in ஆரோக்கியம்
427Shares

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும்.

இது ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது.

அதுமட்டுமின்றி நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள் கண்டிப்பாக வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.

வாயில் புண் வந்து விட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பேசுவது, தண்ணீர் குடிப்பது என்று எல்லாமே கஷ்டமாக இருக்கும்.

நமது அன்றாட உணவு வகைகளிலேயே இதற்கான வைத்தியங்கள் இருக்கின்றன. அதில் வாய்ப்புண் இருப்பவர்களுக்கு கசகசா பெரிதும் உதவி புரிகின்றது.

இதில் பானம் தயாரித்து குடித்து வந்தால் வாய்ப்புண்ணில் இருந்து எளிதில் விடுபடலாம். தற்போது அந்த பானத்தை எப்படி தயாரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • கசகசா - 2 டீஸ்பூன்
  • முந்திரி - 4 பருப்புகள்
  • பாதாம் - 2 பருப்புகள்
  • தேங்காய் - 2 பெரிய வில்லைகள்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • பால் - 1 டம்ப்ளர்
செய்முறை

முந்திரி, பாதாம், கசகசா ஆகியவற்றை 6 மணி நேரம் முன்னதாகவே இளஞ்சூடான நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு பாதாமின் தோலை உரித்து விடவும். கசகசா, முந்திரி, பாதாம், தேங்காய் இவையனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

1 டம்ப்ளர் பாலில் அரைத்த விழுதையும் நாட்டுச் சர்க்கரையையும் தேனையும் கலந்து பருகவும். இது குடிப்பதற்கு மிக சுவையான பானமாக இருப்பதுடன் ஏராளமான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருகிறது.

முக்கிய குறிப்பு

இதனை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.


மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்