வாயில் உள்ள பாக்டீரியாக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதே சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஒருவரது உடலினுள் பாக்டீரியாக்கள்,வைரஸ்கள் போன்றவை வாயின் வழியே எளிதில் நுழையும்.

இப்படி வாயின் வழியே நுழையும் கிருமிகள் உடலின் இதர உறுப்புக்களை பாதித்து பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இதற்கு நம் வீட்டுச் சமையலறையில் வாயில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன.

அந்தவகையில் வாயில் உள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எப்படி இயற்கை முறையில் அழிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா
  • உப்பு
  • ஹைட்ரஜன் பெராக்ஸைடு
செய்முறை

ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரை ஒரு கப்பில் எடுத்து, அதில் டூத் பிரஸை 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்

பிறகு டூத் பிரஷை பயன்படுத்தி, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து எடுத்து, அந்த கலவையால் பற்களை நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும்.

பின் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வாயைக் கொப்பளித்து துப்ப வேண்டும்.

பிறகு டூத் பிக் கொண்டு பற்களின் பின் பிடிந்துள்ள ப்ளேக்கை மென்மையாக தேய்த்து விட வேண்டும். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவ வேண்டும்.

வாரம் ஒருமுறை தவறாமல் பின்பற்றி வந்தால், பற்கள் மற்றும் வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

choice dental

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்