சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எந்தவிதமான ஆடையை அணிய வேண்டும்… தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிகள்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

கோடை காலம் வர ஆரம்பித்து விட்டது. இப்பவே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது. ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதுவும் கோடை காலம் என்றால் சொல்லவே வேண்டாம்… வெளியவே போக சில பேர் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

கோடை காலத்தில் உணவுகளையும், உடைகளையும் மாற்றிக் கொள்வது மிகவும் அவசியம்.

அப்படி வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் எந்த விதமான ஆடைகளை அணிய வேண்டும் என்பதை கவனியுங்கள்.

  • கருப்பு நிறம் மற்றும் பிரகாசிக்கும் ஆடைகளை அணிந்து வெளியில் செல்ல கூடாது. இந்த மாதிரியான ஆடைகள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் உஷ்ணம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் வெள்ளை நிறம் மற்றும் இளம் நிறம் கொண்ட ஆடைகளை அணிய வேண்டும்.
  • முடிந்த அளவு கையில் குடைகளை எடுத்துச் செல்வது நல்லது.
  • குளிர் கண்ணாடிகளை அணிவது கண்களுக்கு மிகவும் நல்லது.
  • பருத்தி ஆடைகளை அதிகமாக கோடை காலங்களில் அணியுங்கள். உடலை பருத்தி ஆடைகள்தான் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
  • காதி உடைகளை அணியுங்கள்.
  • முடிந்த வரை சேலையில் செல்வது நல்லது.
  • ஜீன்ஸ், லெக்கீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
  • நீளமான பாவாடைகளை அணியலாம்.
  • அதிகமாக நீரை அருந்துங்கள்.
  • பழங்கள், காய்கறிகள் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்