நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்புச் சக்தியை எப்படி வலுப்படுத்தலாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் பல வித நோய்களை வந்து நம்மில் ஒட்டி விடுகின்றது.

குறிப்பாக அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் குணமடைய தாமதமாகுதல். போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும்.

இதனை சில இயற்கை உணவுகள் மூலமாக கூட எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும்.

அந்தவகையில் தற்போது எவ்வாறு எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 • தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனை தவிர்க்க தூக்கம் அவசியமாகும்.
 • எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும். ஏனெனில் தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்கின்றது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தயிர் சாப்பிடலாம். ஏனெனில் இதில் தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு அதிகம். இது நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
 • பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடமிளகாய் போன்றவை நமது உணவில் சேர்க்க வேண்டும்.
 • கீரையை வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளதால் இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.
 • வெள்ளைப் பூண்டு உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதனால் தினசரி உணவில் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
 • மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். ரத்தத்தைச் சுத்தகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.
 • வெங்காயத்தில் உள்ள அனிலின் என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
 • பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
 • க்ரீன் டீ குடிப்பது நல்லது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கும். புற்றுநோய், இதய பாதிப்புகளிலிருந்தும் காக்கிறது. அதேநேரத்தில், இரண்டு தடவைக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 • புகைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இது நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது.
 • அதிகளவு மது குடிப்பதை கைவிட வேண்டும். ஏனெனில் இது வெள்ளையணுக்களை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணமாகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்