குதிகால் வலியை ஒரே நிமிடத்தில் போக்க வேண்டுமா? இதை குடித்தால் போதுமே!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஆண், பெண் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் அதிகம் தாக்கும் வலிகளில் ஒன்று தான் குதிகால் வலி.

இது பாதங்களில் எலும்பு மற்றும் தோல் இணையும் பகுதிக்கு இடையே சவ்வு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதில் பாதிப்புகள் ஏற்படுமானால் குதிகால் வலி உண்டாகும் என கூறப்படுகின்றது.

குதிகால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கரடுமுரடுடான பாதைகளில் நடப்பது. அதிக எடையை தூக்குவது.

அதுமட்டுமின்றி முறையற்ற காலணிகள் அணிவது. கால்களில் செருப்பு போடாமல் நடப்பது தான்.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட ஒரு அற்புத மருந்தை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • இஞ்சி – 10 கிராம்
  • பூண்டு 10 கிராம்
  • விரலி இலை – 10 கிராம்
  • மாவிலங்கப்பட்டை – 10 கிராம்
  • அசுவகந்தா – 10 கிராம்
  • கோரைக்கிழங்கு – 10 கிராம்
  • முடக்கத்தான் – 10 கிராம்
செய்முறை

இவைகளை தனி தனியாக வெயிலில் காய வைத்து பின்னர் 300ml தண்ணீர் சேர்த்து மேற்கண்ட அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்து வற்றி கால் அளவு ஆனதும் அடுப்பை அனைத்து விட வேண்டும். இந்த கசாயத்தை உணவு எடுத்து கொள்வதற்கு முன்னர் குடித்து விட வேண்டும்.

காலை மற்றும் மாலை இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால் குதிகால் வலி, உடல் அசதி, முதுகு வலி என்று தசையில் ஏற்படும் அனைத்து வலிகளும் ஓடியே போய் விடும்.

குறைந்தது வாரம் மூன்று நாட்கள் இந்த கசாயத்தை பருகி வரலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் குழந்தைகளுக்கும் ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்