சளி, காய்ச்சலைப் உடனடியாக போக்க வேண்டுமா? அப்போ இந்த கஷாயத்தை குடிச்சி பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

மூலிகையின் ராணி என அழைக்கப்படும் துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

இது சளி, காய்ச்சல் முதல் சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுகின்றது.

அந்தவகையில் தற்போது துளசியை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • துளசி கசாயத்தை தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் துளசி கசாயத்தை குடித்து வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பறந்தோடி விடும்.

  • சிறு வயதில் இருந்தே துளசி இலைகளை மென்று தின்றுவந்தால், சர்க்கரை நோய் நாம் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது.

  • துளசி இலையை சாறெடுத்து அதனோடு எலுமிச்சை சாறையும் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி கூடவே சிறிது தேன் கலந்து, உணவு சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து அருந்தி வந்தால் உடல் எடை குறைய தொடங்கும்.

  • துளசி இலையோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து சாறு பிழிந்து அதில் சுமார் 50 மில்லி கிராம் அளவு மட்டுமே எடுத்துக்கொண்டு, அதோடு சிறிது சீரக பொடியையும் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும்.

  • துளசி இலையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து தோல் வியாதிகளுக்கு பற்று போடலாம்.

  • துளசி இலை, எலுமிச்சை சாறுடன், சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் தேமல் மறையும்.

  • செம்பு பாத்திரத்தில் தேவையான அளவு தூய தண்ணீர் விட்டு அதில் துளசி இலையை போட்டு எட்டு மணி நேரம் வரை மூடி ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் என்றும் இளமையுடனும், தோல் சுருக்கமின்றியும், கண் பார்வை குறைபாடு இன்றியும் வாழலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்