வீட்டிலேயே இயற்கையான முறையில் சானிடைசர் தயாரிக்கலாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுக்கப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த சமயங்களில் கைகளை சுத்தமாக வைத்திருக்க அவசியமானது. அதற்காக ஹேண்ட் சானிட்டைசர்களை அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த ஹேண்ட் சானிட்டைசர்கள் செயற்கை சேர்மானங்கள் கொண்டு செய்யப்படுகின்றது. இதனை தவிர்த்து நாம் வீட்டிலே இயற்கை முறையில் சானிட்டைசர்கள் தயாரிக்கலாம் என ஆயுர்வேத மருத்துவர் கூறுகின்றார்கள்.

இதிலும் வேப்பிலை, வேப்பம் பூ, பழம், விதை, வேப்பம் பட்டை என பொருள்கள் அனைத்துமே மருத்துவ குணம் மிக்க வேப்ப மரத்தின் பட்டை கொண்டு இயற்கை முறையில் சானிட்டைசர் தயாரிக்கலாம். தற்போது இதனை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையானவை
  • வேப்பம் பட்டை
  • தண்ணீர்
  • பச்சை கற்பூரம்
செய்முறை

முதலில் வேப்பம் பட்டையை சீவல் சீவலாக எடுத்துக்கொள்ளவும். வேப்பம் பட்டையுடன் ஒன்றுக்கு நான்கு மடங்கு எனத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த கஷாயத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பச்சைக் கற்பூரத்தை பொடி செய்து ஒரு கிராம் அளவு அதில் கலந்து கொண்டால் சானிட்டைசர் தயார்.

இதைக் கொண்டு கைகளை நாம் அலசி வந்தால் கிருமித்தொற்று நமக்கு ஏற்படாது.

அதுமட்டுமின்றி புண்கள், காயங்கள் இருந்தால், அதற்கும் இந்த சானிட்டைசரைப் பயன்படுத்தலாம்.

இதை, வெளியில் போய்விட்டு வருகிறவர்கள், கைகளில் சிறிதளவு ஊற்றி, அவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சானிட்டைசர்களைப் போலவே பயன்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்