மாதுளை ஜூஸின் மகத்துவங்கள்!... வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. மாதுளை பழ ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தியை கொண்டது.

இந்த ஜூஸ் க்ரீன் டீயை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாதுளை ஜூஸில் அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன. இது மோசமான நோய்களிலிருந்து மனிதனை காக்கும். இந்த பழத்தை ஜூஸ் செய்ததும் உடனே குடித்துவிட வேண்டும். அப்போதான் இதன் சத்து முழுமையாக கிடைக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு சக்தி

மாதுளை ஜூஸ் பலவிதமான புற்றுநோய்களை குணப்படுத்தும். புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை தடுக்கும் தன்மை நிறைந்துள்ளது. மாதுளை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்கி, புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் வல்லமை மாதுளை பழத்திற்கு உள்ளது.

வலிமையான இதயம்

மாதுளை ஜூஸ் இதயத்தை பலப்படுத்துகிறது. இதயத்தில் உண்டாகும் பிரச்சினைகளை மாதுளைஜூஸ் சரி செய்யும். இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுத்து நிறுத்தும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாதுளை ஜூஸ்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியலாம். ஆனால், மருத்துவர்கள் பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு பழங்களை சாப்பிட பரிந்துரைக்கமாட்டார்கள். இந்த பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸை குடித்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். கொலஸ்ட்ரால் அளவையும் குறையும்.

சரும அழகுக்கு

மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாக வைத்துள்ள உதவி செய்கிறது. முதுமையை விரட்டி அடித்து விடும். இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கத்து, புதிய செல்களைப் புதுப்பிக்கக்கூடியது. பருக்கள் அகற்றி, சரும வறட்சியைத் தடுக்கிறது.

தலைமுடி உதிராமல் இருக்க

மாதுளை ஜூஸைக் குடித்தால், அடர்த்தியான முடியை பெறலாம். தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸ்ஸை குடித்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதை தடுக்கும்.

பற்கள் வலிமைபெற

பற்களை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்