ஊரடங்கு காலத்தில் உடல் எடையை சீராக வைத்து கொள்ள வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

கொரோனா பரவு காலக்கட்டத்தில் பல நாடுகளில் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பலரும் தங்கள் எடை கூடிடுமே என்ற சந்தேகம் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை என்ற கவலை தவிர்த்து விட்டு வீட்டில் இருந்தப்படியே உடல் எடையை உணவுகள் மூலம் எப்படி குறைக்கலாம் என்று தற்போது இங்கு பார்ப்போம்.

  • கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வித வயிற்று கோளாறும் ஏற்படாது. ஏனெனில் இது கொழுப்பை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் செல்களில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கவும் உதவுகிறது.
  • கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் கலவை என்பது, கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த கலவையாகும். அதுமட்டுமின்றி, அவை உடலில் நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  • ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளும் வெளியேறும். மேலும், இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், உடலில் கொழுப்பு குறைத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவும்.
  • காய்கறிகளை குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அதுவும், அவற்றை சூடாக சாப்பிடும் போது, தொண்டைக்கு இதமளித்து, தெளிவுப்படுத்திடும்.
  • காய்கறிகளை சேர்த்து வேக வைத்து பின்பு குழம்பில் சேர்ப்பது நல்லது. இதன் மூலம், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்