தேவதையாய் ஜொலி ஜொலிக்க... நம் வீட்டின் அருகில் இருக்கும் இந்த செடி மட்டும் போதுமே

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்தது கற்றாழை. தமிழில் இந்தத் தாவரத்தை கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என அழைக்கின்றனர்.

கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திற்க்கும் பெரிதும் பயன்படுகின்றது.

பெண்களின் அழகிற்கு கற்றாழையின் பங்கு மிக அதிகம். சருமத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கற்றாழை பேணி பாதுகாக்கிறது.

சோற்றுக்கற்றாழைகளை பிளந்து நுங்குச்சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி 7 முறை நன்றாகக் கழுவி மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.

கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.

காற்றாழை ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரக்கூடியது. நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.

காயங்கள்

கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். செடியின் உள்புறத்தில் உள்ள ஜெல்லை காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் புண்ணில் ஏற்படும் எரிச்சல் குறையும்.

மலச்சிக்கல்

கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு பெரிதும் உதவி செய்கின்றன. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தீர்க்கும். மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் இந்த கற்றாழை குணப்படுத்தும்.

முகப்பருக்கள்

முகத்தில் ஏற்படும் பருக்களை கற்றாழை நீக்குகின்றன. ஆனால் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செயல்பாடுகள் அதிகமாக உள்ளதால் கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

சரும திசுக்கள்

கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தி கொள்ளலாம். இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்து அணுக்களை புதுப்பிக்கின்றது. அதனால் பாதிப்படைந்த திசுக்கள் மீண்டும் சீரமைக்கப்படுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்