சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் கருப்பட்டி!

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

பனை மரத்திலிருந்து நுங்கு, பனம்பழம், பனை நீர், கருப்பட்டி போன்ற பொருட்கள் மனிதனின் உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது. அப்படி பனைநீரிலிருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைக்கின்றனர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

கருப்பட்டியில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம்:

 • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு நல்ல சுறுசுறுப்பைக் கொடுக்கின்றது.
 • கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் உடல் மேனி பளபளவென்று மின்னும்.
 • கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்து கலந்துள்ளதால் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும்.
 • பசி எடுக்காதவர்கள் சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
 • வாயு தொல்லை உள்ளவர்கள் ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
 • குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல் போகும். சளித்தொல்லையும் நீங்கும்.

 • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் வலிமை பெறும்.
 • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை பெறும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். கருப்பைக்கு மிகவும் கருப்பட்டி நல்லது.
 • நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
 • குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
 • சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
 • காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
 • கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்து மலச்சிக்கலை தீர்க்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்