நோயாளிகள் குணமடைந்தாலும் கொரோனா பரவலாம்: மருத்துவர்களின் ரிப்போர்ட்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

கொரானா வைரஸ் வல்லரசு நாடுகளையே ஆட்டி படைத்துவிட்டது. இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்துவிட்டார்கள் என்றால் அவர்கள் வீட்டிற்கு சென்றதும் கொரானாவின் தாக்கம் அவர்கள் உடலில் இருக்குமா? அல்லது அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுமா என்ற பல கேள்விகள் எழும்புகின்றது.

இப்படி எல்லாவிதமான கேள்விகளுக்கும் பிரபல மருத்துவ நிபுணர்களான ஸ்வப்னீல் பரிக், மகேரா தேசாய், ராஜேஷ் எம்.பரிக் ஆகியோர் இணைந்து கூட்டாக ஒரு புத்தகம் எழுதி தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-

கொரோனா வைரசின் தாக்கும் காலம் 1- 14 நாட்கள் ஆகும். ஆனாலும், பெரும்பாலான கேஸ்களில் கொரோனா வைரஸ் 5 அல்லது 6 நாட்களாக இருக்கின்றது. அதனால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

விமான பயணத்தின்போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தால் உடனே அவர் கீழே விழுந்துவிடமாட்டார்கள். தாக்கிய 14ம் நாட்களில்தான் வைரஸ் அடைகாக்கும் காலமாகும். அப்போதுதான் அவர்கள் பல நாடுகளுக்கு போகும்போது செல்கிற இடங்களில் இருக்கும் பலருக்கு இந்த வைரசை அவர்களுக்கு அறியாமலேயே பரப்பி விடுகின்றனர்.

விமானத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறபோது, தொடர்பு தடம் அறிதலும், சிகிச்சை அளிப்பதும் மிகவும் கடினமாகிவிடுகிறது. ஏனெனில் அவர்களுடன் பயணம் செய்தவர்கள் வெவ்வேறு நாடுகளை, இடங்களை அடைந்திருக்கலாம். இதனால் தொற்று உலகமெங்கும் மிக ஈஸியாக பரவி விடுகிறது.

அடை காக்கும் காலமானது, பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிய உதவுகிறது. தொடர்புகள் தடம் அறிவதை மிகவும் கவனமுடன் செய்ய வேண்டி உள்ளது. ஒருவரை தவற விட்டுவிட்டால் கூட அவர் மூலம் பலருக்கு கொரானா வைரஸ் ஊடுருவி பரவி விடும்.

கொரானா வைரஸ் பாதித்தவர்களிடம் இருந்து மற்றொருவருக்கு பரவலாம். ஆனால் சில பேர் கோரானா வைரஸ் தாக்கினாலும் நோய்வாய்ப்படாமல், படுக்கையில் விழாமல் இருப்பார்.

அவர்கள் ஆரோக்கியமானவராக இருப்பவராக தோற்றமளிப்பார்கள். ஆனால் இத்தகைய நபர்களை அவர்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அவர்களை கண்காணிக்க வேண்டும்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள், இருமல், தும்மல், முனகல் மூலம் மற்றவர்களுக்கு பரப்பக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நோய் வாய்ப்பட்ட சிலர் மிக அதிகளவில் மற்றவர்களுக்கு பரப்பும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போதைய ஆய்வுகளில், நல்ல ஆரோக்கியநிலையில் இருப்பவர்கள் கூட மற்றவர்களுக்கு கொரோனா வைரசை பரப்புவது உறுதியாகியுள்ளது.

இவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். நோய் அறிகுறி தெரியாது. அவர்களால் மற்றவர்களுக்கு விரைவாக பரப்பி விட முடியும். கொரானாவால் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலோ, லேசான அறிகுறிகளோ இருக்கலாம். அவர்கள் தாத்தா, பாட்டிக்கு மிக எளிதாக பரப்பி விடுவார்கள்.

ஒரு நபர் நோய்வாய்ப்படுவதற்கு முன்பாகவே கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடங்கிவிடலாம். அவர்கள் குணம் அடைந்த பிறகுகூட அது தொடர வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்