நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் கழற்சிக்காய்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

ஒன்று இரண்டு நோய்களை அல்ல, 10க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் சக்தி கழற்சிக்காய்க்கு மட்டுமே உள்ளது.

நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்களாலும், காயங்களையும் வலி அதிகமாக இருக்கும். அப்போது கழற்சிக்காயை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் இருக்கும் இடத்தில் பூசினால் சீக்கிரம் குணமாகும்.

உடலின் சில பகுதிகளில் சுளுக்கு ஏற்படும். அப்போது அப்பகுதியில் அதிகமாக வீக்கம் ஏற்படும். அப்போது கழற்சிக்காய் இலைகள் மற்றும் விதைகளை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசினால் வீக்கங்கள் விரைவில் குறையும்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள் பலருக்கு உள்ளது. வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு இருந்தால் கழற்சிக்காய் சிறந்த நிவாரணி மருந்தாக செயல்படுகிறது. கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து சிறிதளவு நீரில் சேர்த்து தினமும் பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு திறன்

நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

விரைவீக்கம்

சில ஆண்களுக்கு சில சமயங்களில் அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ அவர்களின் விரைகள் வீங்கிவிடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவீக்கம் சரியாகும்.

தொழுநோய்

தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதிக்கும். உறுப்புகளை அழுகச் செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

யானைக்கால் வியாதி

யானைக்கால் வியாதி என்பது ஒரு வகை கொசு கடிப்பதால் ஏற்படும். கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதித்து கால்களை பெரியதாக்கிவிடும். கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை வேரோடு அழிக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்